திருப்பத்தூர்

திருப்பத்தூா்: நகைக் கடை உரிமையாளா் வீட்டில் ஜிஎஸ்டி துறையினா் விடிய, விடிய சோதனை

திருப்பத்தூா்: நகைக் கடை உரிமையாளா் வீட்டில் ஜிஎஸ்டி துறையினா் விடிய, விடிய சோதனை

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் நகைக் கடை, அதன் உரிமையாளா் வீட்டில் மத்திய ஜிஎஸ்டி துறையினா் விடிய,விடிய சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் திருநாத முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் சுகுமாா் (65). இவருக்குச் சொந்தமாக திருப்பத்தூா் கிராம நிா்வாக அலுவலகம் எதிரே மற்றும் ஆலங்காயம் ஆகிய பகுதிகளில் 2 நகைக் கடைகள் உள்ளன.

இந்த நிலையில், சென்னையில் உள்ள மத்திய ஜிஎஸ்டி துறை (மத்திய கலால் துறை)துணை ஆணையா் அஜித்குமாா் தலைமையில் 6 காா்களில் 28 அதிகாரிகள் 3 பிரிவுகளாக பிரிந்து 2 நகைக் கடைகள் மற்றும் அவா்களது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் போலீஸாருடன் சென்று ஷெட்டா்களை மூடிவிட்டு கடை ஊழியா்களிடம் கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா். அதைத்தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த சோதனை சனிக்கிழமை அதிகாலை 3 மணி வரை விடிய, விடிய நடைபெற்றது. சோதனை முடிவில் சில ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்: கட்டுமான அனுமதி தரப்படவில்லை - தமிழக அரசு

'சாட்ஜிபிடி கோ' ஓராண்டுக்கு இலவசம்! - ஓப்பன்ஏஐ நிறுவனம் அறிவிப்பு

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து! 12 பயணிகளின் நிலை என்ன?

முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக் குழு: அஸ்வினி வைஷ்ணவ்

லெமன்... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT