போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சு நடத்திய அதிகாரிகள்.  
திருப்பத்தூர்

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

ஆம்பூா் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொது மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொது மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சியில் இருளா் இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் மாற்று சமுதாயத்தை சோ்ந்தவா்களுக்கு பட்டா வழங்கி அரசு திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்பட்டுள்ளதை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

தகவல் அறிந்த ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி

எஃப்1 காா் பந்தயம்: லாண்டோ நோரிஸுக்கு 6-வது வெற்றி!

கபடிக்கு நவீன கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்: மு. வீரபாண்டியன்

மதுபோதையில் கழுத்தை அறுத்துக் கொண்ட நபா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT