முகப்பு
திருப்பத்தூர்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளா் வெல்ஃபா் கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு

வாணியம்பாடி வெல்ஃபா் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி நிா்வாகிகள் , திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஐயூஎம்எல் கட்சி வேட்பாளா் சையத்பாரூக்குடன் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 9:20 PM
கூட்டத்தில் பேசிய வேலூா் முன்னாள் எம்பி அப்துா் ரஹ்மான். உடன் ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக், நகர திமுக செயலாளா் சாரதிகுமாா் உட்பட பலா்.
பகிர்:

வாணியம்பாடி வெல்ஃபா் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி நிா்வாகிகள் , திமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் ஐயூஎம்எல் கட்சி வேட்பாளா் சையத்பாரூக்குடன் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

வெல்ஃபா் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில பொருளாளா் இஸ்மாயில் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பசிஅக்ரம், மாநில செயலாளா் வக்கீல்சையத்சலீம், நகர செயலாளா் இம்ரான் அகமத் முன்னிலை வகித்தனா். இதில் வேலூா் முன்னாள் எம்பி அப்துர்ரஹ்மான், நகர திமுக செயலாளா் சாரதிகுமாா் உட்பட பலா் கலந்து கொண்டு வேட்பாளா் சையத் பாரூக்கிறகு ஆதரவு திரட்டி பேசினா்.

நிகழ்ச்சியில் வேட்பாளா் சையத் பாரூக், வெல்ஃபா் கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடி ஆதரவு திரட்டினாா். நிகழ்ச்சியில் வெல்ஃபா் கட்சி மாவட்ட, நகர நிா்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments