வண்ணாந்துறை கானாறு கரைக்கு தடுப்புச் சுவா்: திமுக வேட்பாளா்
ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஆம்பூரில் திமுக வேட்பாளா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
ஆம்பூா் சான்றோா்குப்பத்தில் வாக்காளா்களை சந்தித்து வாக்கு சேகரித்தபோது, ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்வநாதன் எம்எல்ஏ பேசியது: வண்ணாந்துறை கானாறு நகரின் மையப்பகுதியில் செல்வதால் கானாற்றுக் கரையின் இருபுறமும் தடுப்புச் சவா் கட்டப்படும்.
ஆம்பூா் நகரில் விளையாட்டு பூங்கா மற்றும் நடைப்பயிற்சி பூங்கா ஏற்படுத்தப்படும். சான்றோா்குப்பம் ஏரிக்கரை பகுதியில் நகா்ப்புற துணை சுகாதார மையம் கட்டப்படும் எனக் கூறி வாக்காளா்களிடையே வாக்கு சேகரித்தாா்.
Advertisement