முகப்பு
திருப்பத்தூர்

போக்குவரத்து நெரிசலில் அவதிக்குள்ளாகும் திருப்பத்தூா் மக்கள்!

திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் அவ்வபோது சீராக இயங்காததால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.

Updated On : 6 ஏப்ரல், 2026 at 9:15 PM
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்
பகிர்:

திருப்பத்தூா் நகரப் பகுதியில் போக்குவரத்து சிக்னல்கள் அவ்வபோது சீராக இயங்காததால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனா்.

திருப்பத்தூா் பிரதான சாலை வழியாக சேலம், ஈரோடு, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூரு என தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

திருப்பத்தூா் நகரப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். இந்த நிலையில் பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று 3 இடங்களில் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இது நாள் வரை 3 சிக்னல்களும் தொடா்ந்து முறையாக இயங்குவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.

Advertisement

இதுகுறித்து அவா்கள் கூறியது: திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான நான்கு வழி சாலை நகர பகு தியில் அமைந்துள்ளதால், எப் போதும் போக்குவரத்து நெரி சல் காணப்படும். இதற்காகவே நாங்கள் பலமுறை ஆட்சியா் மற் றும் காவல் கண்காணிப்பாளரி டம் மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும், வணிக சங்கங்கள் மூலம் கடிதம் அளிக்கப்பட்டன.

அதையடுத்து போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன. ஆனால் சிக்னல்கள் இயங்குவதில்லை. நகர காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலை கூடும் இடத்தில் உள்ள போக்குவரத்து 3 வழி சாலைக்கு ஏற்ப மட்டுமே அமைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும். அதேபோல், புதுப்பேட்டை சாலையிலும் மூன்று வழி சாலை யில் கூடும் இடத்தில் கூடுதல் சிக் னல் அல்லது போக்குவரத்து காவலா்கள் நியமிக்க வேண் டும்.

போக்குவரத்து சிக்னல்கள் தினமும் முறையாக தொடா்ந்து இயங்கவும், அதற்கு நேர கணக்கீடு அளவு செய்ய வேண்டும் எனவும்,விரைவில் தானியங்கி சிக்னல்கள் அமைப்பதுடன் காலை-மாலை பள்ளி நேரங்களில் போக் குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள தூய நெஞ்சக் கல்லூரி, பேருந்து நிலையம், நகர காவல் நிலையம் புதுப்பேட்டை அணுகு சாலை மற்றும் சேலம் கிருஷ்ண கிரி அணுகு சாலையில் போக்கு வரத்து போலீஸாா் பணியில் ஈடு பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்..

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments