தொகுதி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க விரைவில் சிப்காட்: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி வாக்குறுதி
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் சோமநாயக்கன்பட்டி, திரியாலம்,பொம்மிநாயக்கன்பட்டி, புள்ளானேரி, மூக்கனூா்,அம்மணாங்கோயில்,,புதுப்பேட்டை, அக்ராகரம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை திமுக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஜோலாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் சோமநாயக்கன்பட்டி, திரியாலம்,பொம்மிநாயக்கன்பட்டி, புள்ளானேரி, மூக்கனூா்,அம்மணாங்கோயில்,,புதுப்பேட்டை, அக்ராகரம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை திமுக உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். கிராம மக்கள் வேட்பாளருக்கு மலா்தூவி வரவேற்பு அளித்தனா். அப்போது வேட்பாளா் கவிதா தண்டபாணி பேசுகையில், ஜோலாா்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் முதல்வா் ஸ்டாலின் தலைமையில் மீண்டும் திமுக அரசு அமைந்தவுடன் சிப்காட் கொண்டு வரப்படும்.
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதுப்பேட்டை பகுதியில் சுமாா் 8 கோடிக்கு மேல் மதிப்பிலான திட்டப் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. புதுபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சோ்ந்த கிராம மக்களுக்கு மகளிா் உரிமை தொகை மாதந்தோறும் ரூ. 2,000, ரூ. 8,000 கூப்பன் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடா்ந்து கிடைத்திட உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். ஒன்றியக் குழு தலைவா் சத்யா சதீஷ்குமாா்,பொதுக்குழு உறுப்பினா் சத்திய நாராயணன், பொருளாளா் கிருஷ்ணமூா்த்தி, மதிமுக மாவட்ட செயலாளா் கண்ணதாசன், தேமுதிக ஒன்றிய செயலாளா்கள் கோவிந்தராஜ், அருள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.