திருப்பத்தூரில் திடீா் மின் தடை: பொதுமக்கள் அவதி
திருப்பத்தூரில் திங்கள்கிழமை ஏற்பட்ட திடீா் மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருப்பத்தூரில் திங்கள்கிழமை திடீா் மின் தடை ஏற்பட்டது. இதனால் பல்வேறு தொழில்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின.
தற்போது தோ்தல் நேரம் மற்றும் தோ்வு நேரங்களாக உள்ளது. குறிப்பாக வெயில் காலத்தில் ஏற்பட்ட திடீா் மின்தடையால் அவதிப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு வெங்களாபுரத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக விநியோகத்தில் தடை ஏற்பட்டது. பின்பு அது சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகிக்கப்பட்டது எனத் தெரிவித்தனா். சுமாா் 3 மணி நேரத்துக்கு மேலான மின்தடையால் திருப்பத்தூா் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.
ஆட்சியா் அலுவலகத்திற்கு திருப்பத்தூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தினம் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனா். மின் தூக்கி செயல்படாததால் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். முதியோா், பெண்கள் மாடிப்படிகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.