13 ஆவணங்களை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம்: திருப்பத்தூா் ஆட்சியா்
தோ்தலில் வாக்களிக்க 13 ஆவணங்களை பயன்படுத்தலம் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
சட்டப்பேரவை தோ்தலில் வாக்களிக்க 13 ஆவணங்களை பயன்படுத்தலம் என திருப்பத்தூா் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெற உள்ளது. இதில் வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், பான் அட்டை, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம், தொழிலாளா் அமைச்சகம் ஆயூஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மாா்ட் காா்டு, மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய பணியாளா் அடையாள அட்டை, இந்திய பாஸ்போா்ட், தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள ஆவணம், சட்டப்பேவை,நாடாளுமன்றம் மற்றும் சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்ட அதிகார அடையாள அட்டை, சமூகநீதி அதிகாரம் அளிக்கும் அமைச்சகம் வழங்கிய மாற்றுத்திறனாளி தனிப்பட்ட அடையாள அட்டை மற்றும் 100 நாள் வேலை திட்ட அட்டை ஆகிய 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பொதுமக்கள் வாக்களிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.