திருப்பத்தூா் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில்
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை 101.66 டிகிரி வெயில் பதிவானது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதன்கிழமை 101.66 டிகிரி வெயில் பதிவானது.
திருப்பத்தூரில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக 100 டிகிரிக்கு மேல் பதிவாகிறது. இதனால் பகலில் அனல் காற்றும், இரவில் கடும் புழுக்கமும் நிலவி வருகிறது. இதன் காரணமாக பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலையில்,திருப்பத்தூரில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை கடுைம் வெயில் சுட்டெரித்தது. இதனால் வாகன ஓட்டிகள்,தினசரி தொழிலாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் அவதிக்குள்ளாகினா். திருப்பத்தூா் மாவட்டத்தில் 101.66 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement