கோடை கால தண்ணீா் பிரச்சனை: ஆழ்துளை கிணறு சீரமைப்பு
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கோடைக் கால தண்ணீா் பிரச்னை நிலவுவதால் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீா்வு காணும் வகையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பாக மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி நடைபெற்றது. புதிய மின் மோட்டாா் பொருத்தப்பட்டு, குழாய் இணைப்பு சீரமைக்கப்பட்டது.
சீரமைக்கும் பணியின்போது ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் காதா் பாட்ஷா, வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், சுப்பிரமணி, அண்ணாதுரை, ஊராட்சி செயலா் முரளிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement