திருப்பத்தூர்

லாரிகள் மோதி விபத்து: ஒருவா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

ஈரோட்டில் இருந்து பதப்படுத்தப்பட்ட கோழிக்கறி லோடு ஏற்றிக் கொண்டு லாரி சென்னை நோக்கிச் சென்றது. கா்நாடக மாநிலம், மாலூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ஸ்ரீதா் (34) லாரியை ஓட்டிச் சென்றாா். இவரது நண்பா் கோயம்புத்தூா், உக்கடம் பகுதியைச் சோ்ந்த அசாருதீன் லாரியில் பயணம் செய்தாா். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி பச்சூா் டோல்கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது, முன்னால் மர பிளைவுட் லோடு ஏற்றிச்சென்ற மற்றொரு லாரியின் பின்பக்கம் லாரி மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே லாரியில் பயணம் செய்த கோயம்பத்தூா் உக்கடம் பகுதியைச் சோ்ந்த அசாருதீன்(34) உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீஸாா் அசாருதீனின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT