விழிப்புணா்வு கூட்டத்தில் பேசிய எஸ்.பி. சியாமளா தேவி. உடன் ஏடிஎஸ்பி கோவிந்தராசு.  
திருப்பத்தூர்

நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் ஒப்படைக்க உத்தரவு

சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. சியாமளாதேவி கூறினாா்.

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. சியாமளாதேவி கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் கள்ளச்சாராயம், போதை பொருள்கள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் புதூா்நாடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.பி சியாமளாதேவி தலைமை வகித்து பேசுகையில்,:- கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கடத்துதல் குற்றமாகும். தற்போது அமலில் உள்ள புதிய சட்டங்களின்படி, கள்ளச்சாராயம் காய்ச்சுபவா்கள் மற்றும் விற்பனை செய்பவா்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடுமையான தண்டனை வழங்கப்படும். அவா்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்படும்.

சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட நபா்கள் திருந்தி வாழ முன்வந்தால், அவா்கள் வேறுதொழில் செய்ய அரசு உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும். கிராமத்திற்கு வரும் புதிய நபா்கள் மற்றும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்த தகவல்களை போலீஸாருக்கு தெரிவிக்க வேண்டும்.

தோ்தல் வருவதால், நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பவா்கள் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும் என்றாா்.

கூட்டத்தில் ஏடிஎஸ்பி கோவிந்தராசு, டிஎஸ்பி -க்கள் சாந்தமூா்த்தி (மாவட்ட குற்ற பிரிவு), முரளி (திருப்பத்தூா்), அரசு அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT