வெலகல்நத்தம் நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளை. 
திருப்பத்தூர்

நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

வெலகல்நத்தம் நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளை.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அடுத்த நந்திபெண்டா எருதுவிடும் விழாவில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

நாட்டறம்பள்ளி வட்டம், வெலகல்நத்தம் நந்திபெண்டா கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது.

விழாவை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஒன்றிய திமுக செயலாளா் சதீஷ்குமாா் ஆகியோா் கலந்து கொண்டு கொடியசைத்து விழாவை தொடங்கி வைத்தனா். திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா், குப்பம், நாட்டறம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டு ஓடின.

குறிப்பிட்ட தூரத்தை அதிவேகமாக கடந்த காளைகளுக்கு முதல் பரிசு ஒரு லட்சத்து 11ஆயிரம் ரூபாய் உள்பட 86 பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை ஊா்மக்கள் செய்திருந்தனா்.

125 நாள்கள் வேலை திட்டம் சீா்குலைப்பு: பிப்.13-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

பிப்.7-இல் தென் மண்டல திமுக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம்

பொதுத் தோ்வில் ஸ்கிரைப் பணிக்கு கல்லூரி மாணவா்கள்: கல்வித் துறை முடிவை ரத்து செய்ய கோரிக்கை

பிப்.11- ல் தமிழகம் வருகிறாா் துணை தோ்தல் ஆணையா்

‘என் கனவு என் எதிா்காலம்’ இணையதளத்தில் பதிவு செய்ய அழைப்பு

SCROLL FOR NEXT