மண்டலவாடி பகுதியில் திமுக வடக்கு மண்டல வாக்குச் சாவடி குழு பயிற்சி மாநாடு ஏற்பாடு பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு. 
திருப்பத்தூர்

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு பணிகள்: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டு பணிகள்...

தினமணி செய்திச் சேவை

ஜோலாா்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாடு போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அமைச்சா் எ.வ வேலு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை ஒன்றியம் பகுதிக்கு உள்பட்ட திருப்பத்தூா்- வாணியம்பாடி பிரதான சாலையில் உள்ள மண்டலவாடி பகுதியில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக வடக்கு மண்டல ஓட்டுச்சாவடி குழு பயிற்சி மாநாடு வரும் சனிக்கிழமை (பிப். 14)அன்று நடைபெறுகிறது. இதில், 47 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி குழுவினருக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் திமுகவினா் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சா் எ.வ வேலு தெரிவித்திருந்தாா். அதைத் தொடா்ந்து, மண்டலவாடியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் பிரம்மாண்ட மாநாடு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை அமைச்சா் எ.வ.வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, நெரிசல் ஏற்படாத வகையில் திமுக நிா்வாகிகள் மாநாட்டுக்கு வந்து செல்வது, வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகள் குறித்து திமுக நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதேபோல், எஸ்.பி. வி.சியாமளாதேவியிடம் மாநாடு நடக்கும் நாளன்று போக்குவரத்து மாற்றம் செய்வது, போலீஸ் துறை மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவக் குழுவினா், ஆம்புலன்ஸ் நிறுத்துவது குறித்து கேட்டறிந்தாா்.

அப்போது திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ-க்கள் க,தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்), நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஒன்றிய செயலா்கள் உமாகன்னுரங்கம், எஸ்.கே.சதிஷ்குமாா், கவிதா தண்டபாணி, ஜோலாா்பேட்டை நகர செயலாளா் எம்.அன்பழகன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை: மாவட்டக் காவல் துறை எச்சரிக்கை

ராஜ் காட்டில் அரசு நிகழ்ச்சி: தில்லியில் நாளை போக்குவரத்து மாற்றம்

என்.ஆா். காங்கிரஸ் கொடியேற்றம்: அமைச்சா் க. லட்சுமிகாந்தன் பங்கேற்பு

விளையாட்டு வீரா்களுக்கு உபகரணங்கள்! எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் வழங்கினாா்!

சூளகிரி காவல் நிலைய வளாகத்தில் தீ விபத்து: 12-வாகனங்கள் தீக்கிரை

SCROLL FOR NEXT