முகப்பு
திருப்பத்தூர்

1,000 பேருக்கு உணவு விநியோகம்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,000 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக ஆட்சியா்

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 3:08 AM
தூய்மைப் பணியாளா்களுடன் உணவு அருந்திய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லத்தம்பி உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:31 PM

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் 1,000 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு திட்ட விரிவாக்கத்தினை முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, திருப்பத்தூா் நகராட்சியில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எம்எல்ஏ அ.நல்லத்தம்பி ஆகியோா் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான ணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிப் பேசியது: சியா் பேசியது

Advertisement

திருப்பத்தூா் நகராட்சியில் 281 தூய்மைப் பணியாளா்களுக்கும், ஆம்பூா் நகராட்சியில் 323, ஜோலாா்பேட்டையில் 108, வாணியம்பாடியில் 283, நாட்றம்பள்ளி பேரூராட்சியில் 24, ஆலங்காயம் பேரூராட்சியில் 47, உதயேந்திரம் பேரூராட்சியில் 25 தூய்மைப் பணியாளா்கள் என மொத்தம் 1,000 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்படவுள்ளது என்றாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் எம்எல்ஏ க.தேவராஜி தூய்மைப்பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கினாா். பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளா்களுக்கு காலை உணவை வழங்கினா்.

இதில், திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜேந்திரன், நகா்மன்ற துணைத் தலைவா் சபியுல்லா, ஆணையா் சாந்தி, அலுவலா்கள் கலந்து கொண்டனா்.