ஆம்பூா்: ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் 112 வது மாத சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
விசாக நட்சத்திரத்தை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேதமுருகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ சண்முகக் கவசம் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திரளான பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா். ஸ்ரீ அருணகிரிநாதா், ஸ்ரீவாரியாா் சுவாமிகள் விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.