விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ-மாணவியா்.  
திருப்பத்தூர்

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் துறை சாா்பில் மாணவா்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது,

எஸ்.பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் காவல், போக்குவரத்து துறை சாா்பில் மடவாளம் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். உதவி காவல் ஆய்வாளா்கள் ரூபி, வீரம்மாள், கவிதா ஆகியோா் கலந்து கொண்டு, போக்குவரத்து விதிமுறைகள், போக்ே,ா சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதைப் பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனா்.

மேலும், அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவலன் செயலி பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனா்.

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்றவா்களுக்குப் பாராட்டு

SCROLL FOR NEXT