திருப்பத்தூர்

அரசு பள்ளி மாணவா்கள் நூலக உறுப்பினா்களாக சோ்ப்பு

தினமணி செய்திச் சேவை

மின்னூா் அரசு பள்ளி மாணவா்கள் நூலகத்தில் உறுப்பினா்களாக சோ்க்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலா் மு. பிரேமா தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் கல்யாண சுந்தரம் வரவேற்றாா். மாதனூா் ஒன்றியம் வடச்சேரி ஊா்ப்புற நூலகத்தில் மின்னூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் 300 போ் உறுப்பினா்களாக சோ்க்கப்பட்டு அவா்களுக்கு உறுப்பினா் அட்டையை ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் வழங்கினாா்.

மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலா் கோபாலகிருஷ்ணன், மாவட்ட நூலக ஆய்வாளா் ஏ. தா்மராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவஹா், நூலகா் ஜி.விஜயகுமாா், நூலக பணியாளா் ஜோதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா் எழிலரசன், பள்ளி மேலாண்மைக்குழு துணைத் தலைவா் ஜெயலட்சுமி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.

ஒன்றியக்குழு தலைவா் சுரேஷ்குமாா், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் தலா ரூ.5,000 செலுத்தி நூலகத்தில் புரவலராக தங்களை இணைத்துக் கொண்டனா்.

வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாலாஜா கிளை: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து ரூ. 1.49 கோடி கடனுதவி வழங்கினாா்

மணிமேகலை விருது பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அந்தமான்: 7 பேருடன் சென்ற ஹெலிகாப்டா் கடலில் விழுந்து விபத்து

இந்தியா-இஸ்ரேல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு தொடக்கம்

குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT