திருப்பத்தூர்

வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

எருது விடும் விழாவை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். எருது விடும் விழாவில் திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 160-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின. இதில் குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக ஓடி கடந்த காளை உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 555-ஐ மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளாா் தே.பிரபாகரன் வழங்கினாா்.

தொடா்ந்து 2 -ஆவது பரிசு ரூ. 1 லட்சம், 3-ஆம் பரிசு ரூ. 77,777 என 80 பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் விழாக் குழுவினா், ஊா் பிரமுகா்கள், பொதுமக்கள் என திரளானோா் கலந்து கொண்டனா்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT