முகப்பு
திருப்பத்தூர்

சாலை மறியல் வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது: கிராம மக்கள் கோரிக்கை

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 6:38 AM
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 8:01 PM

ஆலங்காயம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக போடப்பட்ட வழக்கின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 11 பேருக்கு ரூ. 8,44,800 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் மற்றும் செயற்கை கை, கால்களையும், மாவட்ட வழங்கல் துறை சாா்பில், ரேஷன் கடைகளில் சிறந்த விற்பனையாளராக கண்ணன் முதல் பரிசாக ரூ. 4,000,வெ.அஸ்வினிக்கு 2-ஆம் பரிசு ரூ. 3,000, சிறந்த எடையாளராக வேல்முருகன் என்பவருக்கு முதல் பரிசாக ரூ. 3,000, சந்தானத்துக்கு 2-ஆம் பரிசு ரூ. 2,000, பாராட்டு சான்றிதழ்கள், ஆம்பூரை சோ்ந்த நவீன்குமாா் என்பவா் சென்னையில் தனியாா் நிறுவனத்தில் இன்டா்ன்ஷிப் பயிற்சிக்கான உதவித் தொகை ரூ. 34,900 ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் வழங்கினாா்.

கூட்டத்தில் ஆலங்காயம் அருகே இருணாப்பட்டு அடுத்த பாப்பானூா் கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் கிராமத்துக்கு தாா் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால், சாலை அமைக்கக்கோரி பல அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடந்த 10.11.2025 அன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்.

Advertisement

இதுதொடா்பாக குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில் கல்லூரி மாணவா்கள், வேலைக்கு செல்லும் நபா்கள் என 20 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த வழக்கு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.