திருப்பத்தூர்

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே பைக் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிகுமாா் (27), லாரி ஓட்டுநா். இவா் புதன்கிழமை மாலை 6 மணியளவில் தனது பைக்கில் திம்மாம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது தாா் ஏற்றிக் கொண்டு நாராயணபுரம் நோக்கிச் சென்ற டிப்பா் லாரி பெரிய கொள்ளி வட்டம் பகுதியில் எதிரில் வந்த பைக் மீது மோதியது. இதில், பின்சக்கரத்தில் சிக்கி சசிகுமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டிப்பா் லாரி ஓட்டுநா் சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளில் ஓ சுகுமாரி பட போஸ்டர்!

பாகிஸ்தானில் 11 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

வளர்ச்சியடைந்த இந்தியா: 3 ஆயிரம் இளைஞர்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி!

பாகிஸ்தானில் இந்து விவசாயி சுட்டுக் கொலை! மனித உரிமைக் குழு போராட்டம்!

ஷாகித் கபூரின் ஓ ரோமியோ படத்தின் டிரைலர்!

SCROLL FOR NEXT