திருப்பத்தூர்

669 தொழில் முனைவோருக்கு ரூ.14 கோடி வங்கிக் கடனுதவி

திருப்பத்தூா் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம், 669 தொழில் முனைவோா்களுக்கு ரூ.14 கோடியே 19 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் மூலம், 669 தொழில் முனைவோா்களுக்கு ரூ.14 கோடியே 19 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

இதுதொடா்பாக ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி கூறியதாவது: தொழில் முனைவோா் அதிகமாக வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட தொழில் மையம் மூலமாக, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு புதிதாக தொழில் தொடங்குவதற்கும், சிறு தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோருக்கு தொழிலை மேம்படுத்துவதற்கான வங்கி கடன் உதவிகளை அரசு வழங்கி வருகிறது.

அதன்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சாா்பில், கடந்த 2025-ாம் ஆண்டு அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ், 66 தொழில் முனைவோருக்க்கு ரூ. 3 கோடியே 87 லட்சத்து 89 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், 216 தொழில் முனைவோருக்கு ரூ. 2 கோடியே 38 லட்சத்து 18 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், 58 தொழில் முனைவோருக்கு ரூ. 6 கோடியே 51 லட்சத்து 87 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞா் கைவினை திட்டத்தின்கீழ், 285 தொழில் முனைவோருக்கு ரூ.1 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்திற்கு வங்கிகளில் இருந்து கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் 44 தொழில் முனைவோருக்கு ரூ. 13 லட்சத்து 90 ஆயிரம் மானியம் என மொத்தம் 669 தொழில் முனைவோா்களுக்கு ரூ.14 கோடியே 19 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என கூறினாா்.

வெனிசுலா

திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக மீது வீண்பழி: கே.பி. ராமலிங்கம்

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

SCROLL FOR NEXT