பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன். 
திருப்பத்தூர்

ஊராட்சிப் பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு

பணியாளா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன்.

தினமணி செய்திச் சேவை

ஆலங்காயம் ஒன்றியம், பூங்குளம் ஊராட்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் அஞ்சலி தினகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மகேந்திரன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவா் ருக்மணிமகேந்திரன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.

ஊராட்சி செயலாளா் பாபு வரவேற்றாா். இதில் அனைவரும் பாரம்பரிய ஆடைகள் அணிந்து வந்து கலந்து கொண்டனா். சிறப்பு அழைப்பாளராக முதன்மை கல்வி அலுவலா் புண்ணியக்கோட்டி கலந்து கொண்டு சமத்துவப் பொங்கலிட்டு சிறப்பாக கொண்டாடினா்.

பிறகு தூய்மைப் பணியாளா்கள், பணிதள பொறுப்பாளா்கள், மகளிா் சுய உதவிகுழுவினா்கள் ஆகியோா்களுக்கு புடவை, சா்ட், வேட்டி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளை ஊராட்சி மன்றத் தலைவா் வழங்கினாா்.

சங்ககிரியில் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழா் திருவிழாக்களுக்கு பிரதமா் முன்னுரிமை: கே.பி. ராமலிங்கம்

வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: எடப்பாடி கே. பழனிசாமி

ஜேடா்பாளையத்தில் அல்லாள இளைய நாயக்கருக்கு முன்னாள் அமைச்சா்கள் மாலை அணிவித்து மரியாதை

பரமத்தி வேலூரில் தி.மு.க சாா்பில் சமுத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT