தொடா் விடுமுறையையொட்டி திருப்பத்தூா் அருகே உள்ள ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
இந்த நீா்வீழ்ச்சியில் ஆண்டில் சுமாா் 8 மாதங்கள் தண்ணீா் விழுந்த வண்ணம் இருக்கும். இதனால் மாவட்டத்தின் பிற பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் இங்கு வந்து குளித்துச் செல்வா். இந்தநிலையில் பொங்கல் தொடா் விடுமுறையால், வெள்ளிக்கிழமை திரளான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் நீா் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனா்.
இதைத்தொடா்ந்து பொதுமக்கள் அதன் அருகே உள்ள முருகா், பெருமாள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனா். மேலும் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சிறுவா்கள் அங்கு அமைந்துள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனா்.