நெல்லை - கோவாவுக்கு கோடை சுற்றுலா ரயில்! முழு விவரங்கள்..!
நெல்லை - கோவாவுக்கு கோடை சுற்றுலா ரயில் இயக்கம் பற்றி...
கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில் இயக்கப்படவிருப்பதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
7 நாள்கள் பயணத்துக்கான கட்டணமாக ஒரு நபருக்கு ரூ. 26,300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
Advertisement
Advertisement
”இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி, கோடை விடுமுறையை முன்னிட்டு கோவாவுக்கு சிறப்பு ரயில் சுற்றுலாவை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிறப்பு சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, ஓசூர் வழியாகச் செல்கிறது.
மேற்கூறிய சுற்றுலாத் தொகுப்பில் பிரபலமான தூத்சாகர் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதும் அடங்கும். மேலும் சுற்றுலா கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 26,300/- லிருந்து தொடங்குகிறது.
மே. 1 ஆம் தேதி புறப்பட்டு, மே. 7 திரும்பி வரும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3 ஏசி வகுப்பில் ரயில் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலா தலங்களை பார்வையிடுவதற் ஏசி பேருந்து போக்குவரத்து ஆகியவை முக்கிய அம்சங்கள் ஆகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nellai - Goa Tourist Train for summer! Full details..!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.