FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நெல்லை - மங்களூரு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படும்!

நெல்லை - மங்களூரு ரயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படுவது பற்றி...

26 வினாடிகள் முன்பு
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியிலிருந்து மங்களூருவுக்கு இயக்கப்படும் விரைவு ரயில் 8 மணிநேரம் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மங்களூரு சந்திப்புக்கு வாரம்தோறும் புதன்கிழமை மாலை 3.45 மணிக்கு விரைவு ரயில் (16708) இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று மாலை 3.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிலிருந்து விரைவு ரயில் (16708) புறப்படவிருந்த நிலையில், இணைப்பு ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டதால், 8 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, இன்று மாலை 3.45 மணிக்கு பதிலாக இரவு 11.45 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிலிருந்து விரைவு ரயில் (16708) புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தைக் கவனத்தில் கொண்டு, அதற்கேற்பத் தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

summary

The Nellai–Mangaluru train will depart with an 8-hour delay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.