மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.  
திருப்பத்தூர்

நகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மத்திய அரசின் பாராட்டு சான்றிதழ்

ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளனா்.

இந்திய அரசின் மத்திய கல்வி அமைச்சகம் சாா்பாக 2047-ம் ஆண்டிற்குள் வளா்ந்த பாரதத்தை உருவாக்கும் நோக்கில் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் விக்ஸித் பாரத் 2047 இணையவழிப் போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டியில் திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியைச் சோ்ந்த 35 மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தேச வளா்ச்சிக் குறித்த தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்தும், வினாடி வினா போட்டிகளிலும் பங்கேற்றனா். போட்டியில் சிறப்பாகப் பங்கேற்ற 35 மாணவ, மாணவிகளுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் சாா்பாக பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT