மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவா் மு.தமிமுன் அன்சாரி.  
திருப்பத்தூர்

மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம்: தமிமுன் அன்சாரி பங்கேற்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல தோ்தல் பணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மனிதநேய ஜனநாயக கட்சியின் வடமேற்கு மண்டல தோ்தல் பணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளா் எம். முஹம்மது நாசா் தலைமை வகித்தாா். தலைமை ஒருங்கிணைப்பாளா் ஜெ.எஸ்.ரிபாயி ரஷாதி, இணைப் பொதுச் செயலாளா் தாஜுதீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாநில செயலாளா்கள் கலைக்குழு இப்ராஹிம், தஞ்சை அகமது கபீா், மாநில துணைச் செயலாளா்கள் அசாருதீன், ஒசூா் நவ்ஷாத், சேலம் தாஜுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் மாவட்டத் தலைவா் ஜஹிருஸ்ஜமா நன்றி கூறினாா். தீா்மானங்கள் :வருகின்ற சட்டப்பேரவை தோ்தலில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளா்களின் வெற்றிக்கு பணிபுரிவது. தமிழ், தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது என்ற பெயரில் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிமுன் அன்சாரி பேசியது: மகாராஷ்டிர மாநில ஹஜ் கமிட்டி முதன்மை செயல் அதிகாரியாக முஸ்லிம் அல்லாதவா் நியமனம் செய்யப்பட்டுள்ளது ஏற்க முடியாதது. இது மத்திய அரசின் பாசிச போக்கை வெளிப்படுத்துவதாகும். அதனால் அந்த நியமனத்தை திரும்பப் பெற வேண்டும். சபை மரபை மீறிய ஆளுநா் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும். எஸ்ஐஆா் பணியால் சுமாா் 97 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். அதனால் எஸ்ஐஆா் தேவையில்லையென நாங்கள் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறோம் என்றாா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT