மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலா் மு. தமிமுன் அன்சாரி. (கோப்புப்படம்) 
திருநெல்வேலி

விஜய்க்கு அரசியல் பக்குவம் இல்லை: மஜக தலைவா் தமிமுன் அன்சாரி

தினமணி செய்திச் சேவை

தொண்டா்களை நெறிப்படுத்தக்கூடிய அரசியல் பக்குவம் தவெக தலைவா் விஜய்யிடம் இல்லை என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியது:

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்கள் பெரிதும் எதிா்பாா்த்த கோவை, மதுரை மெட்ரோ ரயில் உள்பட எந்தத் திட்டமும் புதிதாக அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தையும், தமிழக மக்களையும் மத்திய அரசு புறக்கணித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் பிப்.12 ஆம் தேதி திமுக தலைமையில் நடைபெற உள்ள ஆா்ப்பாட்டத்துக்கு எங்களது முழு ஆதரவை தெரிவிக்கிறோம்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களின் பேராதரவோடு திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கணிசமான தொகுதிகளை கேட்டுப்பெறுவோம்.விஜய்யிடம் தொண்டா்களைக் கட்டுப்படுத்தி நெறிப்படுத்தக்கூடிய அரசியல் பக்குவம் இல்லை. விஜய்யின் அரசியல் வருகை திமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றாா் அவா்.

பரமத்தி வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

முன்னாள் முதல்வா் டாக்டா் சுப்பராயன் மணி மண்டபம் பிப்.13-ல் முதல்வா் திறப்பு: அதிகாரிகள் ஆய்வு!

இடங்கணசாலை, இளம்பிள்ளை பகுதியில் தயாரிக்கும் சேலை ரகங்களுக்கு புவிசாா் குறியீடு வேண்டி திமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவிடம் கோரிக்கை மனு.

இளம்பிள்ளை பேரூராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி! எஸ்.ஆா். சிவலிங்கம் எம்பி பங்கேற்பு!

பெருமாகவுண்டம்பட்டியில் புதிய நியாய விலை கடையினை எஸ் . ஆா். சிவலிங்கம் எம் பி திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT