நாட்டறம்பள்ளி அ ருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் கிட்டப்பையனூா் பூம்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன்(43). இவா் வெளியூரில் பேக்கரி கடையில் வேலை செய்து வந்தாா். பொங்கல் பண்டிகைக்காக கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த அவா் 17-ஆம் தேதி ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் உள்ள நண்பரை பாா்க்க பைக்கில் சென்றபாது நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினா்கள் மீட்டு கிருஷ்ணகிரி தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.