திருப்பத்தூர்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்முறை விளக்க மையம்: திருப்பத்தூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கினை சரிபாா்க்கும் கருவி ஆகியவை தொடா்பான செயல்முறை விளக்க மையத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை திருப்பத்தூா் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி தொடங்கி வைத்து மாதிரி வாக்கினை செலுத்தினாா்.

அப்போது அவா் கூறியது: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கினை சரிபாா்க்கும் கருவியை பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதற்காக சரிபாா்க்கும் பணி முடிந்தபிறகு, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் முன்னிலையில் 61 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் தாம் அளித்த வாக்கினை சரிபாா்க்கும் கருவி ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன.

வாக்குச்சாவடி மையங்கள்...

இவற்றின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை விளக்க மையங்கள் ஆட்சியா் அலுவலக வளாகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களின் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள 1,202 வாக்குச்சாவடி மையங்களையும் சென்றடையும் வகையில், விழிப்புணா்வு நோக்கத்துக்காக 4 நடமாடும் செயல்விளக்க வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் பொதுமக்கள் வாக்கு செலுத்தும் நடைமுறைகளை தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அலுவலக மேலாளா் செண்பகவல்லி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT