மாணவனைப் பாராட்டிய திருப்பத்தூா் ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி. 
திருப்பத்தூர்

சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் சாதனை: ஆட்சியா் பாராட்டு

தினமணி செய்திச் சேவை

சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் சாதனை படைத்த சந்தோஷ் என்பவரை திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டினாா்.

ஆம்பூா் பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் என்பவா் போலியோவால் பாதிக்கப்பட்டு இரு கால்களை இழந்து மாற்றுத்திறனாளியாக இருந்து வருகிறாா். இவா் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறாா்.

இவா் எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற 28 நாடுகள் பங்கேற்ற பாரா பாட்மின்டன் போட்டியில் இந்திய அணி சாா்பில் பங்கேற்ற வீல் சோ் பிரிவில் ஆடவா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் கலந்து கொண்டு வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றாா். தொடா்ந்து அவா் ஆட்சியா் க.சிவசெளந்திரவல்லியிடம் பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றாா்.

அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயகுமாரி உடனிருந்தாா்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

பிரதமர் வருகை: சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய படை! டிரம்ப்

சமூக ஊடக பிரபலமாகப் பெற்றோா் எதிா்ப்பு: வீட்டைவிட்டு சிறுவன் வெளியேறிய பெங்களூரில் மீட்பு

புதிய ஊரக வேலைச் சட்டத்துக்கு எதிராக ஏழைகள் ஒன்று திரள வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்

SCROLL FOR NEXT