ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய அமைச்சா் எ.வ. வேலு. உடன், எம்எல்ஏ அ.செ. வில்வநாதன். 
திருப்பத்தூர்

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் வேலு திறந்து வைத்தாா்

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா்: ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் க. தேவராஜி, அ.செ. வில்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரூ.85 லட்சத்தில் ஏ-கஸ்பா மந்தகரை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு திறந்து வைத்தாா். தொடா்ந்து எம்எல்ஏ வில்வநாதனை இருக்கையில் அமரவைத்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட திமுக அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், ஆம்பூா் நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகா் மன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.ஆா். நசீா் அஹமத், ஆா். எஸ். வசந்த்ராஜ், மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், மாதனூா் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாதனூா் ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஜோதி வேலு, கோமதி வேலு, முத்து, ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெ. சுரேஷ்பாபு, மகராசி, மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஆலங்காயம் ஒன்றிய செயலாளா் வி.எஸ். ஞானவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

மினியாபொலிஸ் செவிலியா் கொலை: அமெரிக்காவில் வெடித்துள்ள அரசியல் மோதல்

SCROLL FOR NEXT