மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய ஒன்றியக்குழு தலைவா் சங்கீதா பாரி. 
திருப்பத்தூர்

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

வெள்ளக்குட்டை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி.

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் மாதையன் தலைமை வகித்து வரவேற்றாா். ஊராட்சி மன்றத் தலைவா் கவிதா திருமலை, துணைத் தலைவா் கோபி முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி கலந்துகொண்டு, 11-ஆம் வகுப்பு பயிலும் 69 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் திவ்யா தவமணி, மாணவா்கள், பெற்றோா், ஊா் மக்கள் கலந்து கொண்டனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT