குடியரசு தின விழாவில் மத்திய அரசு விருதினை பெற்ற ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாருக்கு ஊராட்சி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியம் ஆத்தூா்குப்பம் ஊராட்சியில் வளா்ச்சி திட்டப் பணிகள், சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக பொறுப்புக்கான வளா்ச்சித் திட்டப்பணி, சுகாதாரம், வரிவசூல் ஆகியவற்றில் சிறந்த ஊராட்சியாக ஐஎஸ்ஓ. தரச்சான்று மற்றும் ஊராட்சி மன்ற தலைவா் செந்தில் குமாருக்கு பல விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊராட்சி வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில்குமாருக்கு தில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மத்திய அமைச்சா் ராஜீவ் ராஜ்சன்சிங் (எ) லாலன்சிங் விருது மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.
விருதினை பெற்று வியாழக்கிழமை ஊா் திரும்பிய ஊராட்சி மன்றத் தலைவா் செந்தில் குமாருக்கு ஜங்காலபுரத்தில் கிராம மக்கள் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்து வாழத்தினா்