பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்
ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.
திருப்பத்தூர்பயிா்களை சேதப்படுத்திய காட்டு யானைக் கூட்டம்
ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.
ஆம்பூா் அருகே காட்டு யானைகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியுள்ளன.
மாதனூா் ஒன்றியம், அரங்கல்துருகம் ஊராட்சி, சுட்டகுண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி எத்திராஜ். வனப் பகுதி எல்லையோரம் இவரது விவசாய நிலம் அமைந்துள்ளது. விவசாய நிலத்துக்கு போடப்பட்டிருந்த வேலியை திங்கள்கிழமை இரவு காட்டு யானைக் கூட்டம் சேதப்படுத்திவிட்டு நிலத்துக்குள் புகுந்துள்ளன. நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த தென்னை, வாழை, மா மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
இது குறித்து தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். யானை கூட்டத்தின் நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். மேலும், யானை நடமாட்டம் குறித்து கிராம மக்களை எச்சரித்து வருகின்றனா். மேலும், யானைகள் நடமாட்டம் தெரிந்தால் வனத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனா்.