முகப்பு
திருப்பத்தூர்

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

Updated On : 6 மார்ச், 2026 at 6:32 PM
உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ செந்தில்குமாா்.
பகிர்:

உதயேந்திரம் பேரூராட்சியில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட உதயேந்திரம் பேரூராட்சி மேட்டுப்பாளையம் மேட்டுத் தெரு பகுதியில் அங்கன்வாடி கட்டடம், உதயேந்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச் சுவா் அமைத்து தரக் கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதையடுத்து அங்கன்வாடி கட்டடம் மற்றும் சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்திடும் வகையில், எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை தொடங்கிட பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா். பின்னா்றகு உதயேந்திரம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அவா்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா். தொடா்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்த மக்களிடமும் மற்றும் மருத்துவரிடம் சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் உதயேந்திரம் பேரூா் அதிமுக செயலாளா் சரவணன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், நிா்வாகிகள், பொது மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →