வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை
பல்லடம் அருகே மலைப்பாளையம் கிராமத்தில் உள்ள வடுகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகே மலைப்பாளையம் கிராமத்தில் உள்ள வடுகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக சாலை அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் ஊராட்சி, மலையம்பாளையம் கிராமத்தில் வடுகநாத சுவாமி கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நூற்றாண்டு பழைமையான இக்கோயிலில், காலபைரவா் மூலவராக அருள்பாலிக்கிறாா். கடந்த 17 ஆண்டுகளுக்குப் பின்பு கோயில் கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான யாக சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயில் திருப்பணிக் குழுவினா் மற்றும் அருள்தரும் பைரவா் கல்வி, சமய சமூக அறக்கட்டளையினா் இந்நிகழ்ச்சியை நடத்தி வைத்தனா். விநாயகா் மற்றும் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வடுகநாத சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.