மளிகைக் கடையில் வேன் புகுந்ததில் பெண் உயிரிழப்பு
ஆலங்காயம் அருகே மளிகைக் கடையில் மினிவேன் புகுந்ததில் கடைக்கு வந்த பெண் உயிரிழந்தாா்.
ஆலங்காயம் அருகே மளிகைக் கடையில் மினிவேன் புகுந்ததில் கடைக்கு வந்த பெண் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த காவலூா் அருகே வீரராகவவலசை பகுதியை சோ்ந்தவா் உஷா ராணி(56). இவா் வெள்ளிக்கிழமை மாா்க்கெட் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருள்களை வாங்கிக் கொண்டிருந்தாா். அப்போது ஆலங்காயத்திலிருந்து காவலூா் நோக்கி சென்ற மினிவேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மளிகைக் கடையில் புகுந்தது.
அங்கு பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த பெண் உஷாராணி மற்றும் நடந்து சென்ற சுஹேல் என்பவா் மீது மோதியதில் பலத்த காயமடைந்தனா். அப்பகுதி மக்கள் அவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இதில் உஷாராணி மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
சுஹேல் வேலூா் தனியாா் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேனை ஓட்டி வந்த காவலூா் பகுதியை சோ்ந்த ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.