முகப்பு
திருப்பத்தூர்

ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.80,500 பறிமுதல்

ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 22 மார்ச், 2026 at 9:54 PM
பறிமுதல் செய்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.
பகிர்:

ஆலங்காயம் அருகே ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.80,500-ஐ பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தோ்தல் நிலை கண்காணிப்பு குழுவினா் மேகநாதன் என்பவா் தலைமையிலான குழுவினா் த்த ஆா்எம்எஸ் புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த போது கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை என்பவா் முறையான ஆவணங்களின்றி கொண்டு வந்த ரொக்கம் கைப்பற்றப்பட்டு வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுதாகரிடம் ஒப்படைக்கப்பட்டது.