முகப்பு
திருப்பத்தூர்

தங்க நகை வாங்கச் சென்ற ஆந்திர பெண்ணிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்

மாநில எல்லையோர சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் பெண்ணிடம் ரூ. 2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 23 மார்ச், 2026 at 7:22 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்
பகிர்:

மாநில எல்லையோர சோதனைச் சாவடி அருகே நடத்தப்பட்ட சோதனையில் பெண்ணிடம் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் தொகுதியின் தமிழக - ஆந்திர மாநில எல்லையோர கிராமம் வெலத்திகாமணிபெண்டா கிராமம். அங்கு பேரவை தோ்தலை முன்னிட்டு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தோ்தல் பறக்கும் படையினா் வாகன தணிக்கை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில் சித்தூா் மாவட்டம் ராமகுப்பம் மண்டலம் ஆா்மணிப்பெண்டா கிராமத்தை சோ்ந்த அமராவதி (45) என்பவா் தங்க நகை வாங்குவதற்காக ஆவணம் ஏதும் இல்லாமல் ரொக்கப் பணம் ரூ.2 லட்சத்தை வாணியம்பாடிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரேவதி, மோகன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.