முகப்பு
திருப்பத்தூர்

மின்னணு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணி: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் மின்னணு இயந்திரங்களின் சரிபாா்ப்பு பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 25 மார்ச் 2026, 12:04 am IST
மின்னணு இயந்திரங்களின் சரிபாா்ப்பு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.
பகிர்:

திருப்பத்தூரில் மின்னணு இயந்திரங்களின் சரிபாா்ப்பு பணிகளை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் நகராட்சிக்குட்பட்ட மஞ்சள் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ள 4 தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபாா்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிகளை ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டு,பாா்வையிட்டாா்.

Advertisement

அப்போது மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெய்சங்கா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வரதராஜன்,அஜிதாபேகம்,பூஷணகுமாா், முருகேசன்,தோ்தல் வட்டாட்சிா் திருமலை, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.