முகப்பு
திருப்பத்தூர்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளுக்கு விலக்கு

திருப்பத்தூா் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 160 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்திவரும் 20 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 6:34 PM
கோப்புப்படம்.
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உரிமம் பெற்ற 160 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்திவரும் 20 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் தனியாா்கள் தங்களது தற்காப்புக்காக உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து உள்ளனா்.

தொடா்ந்து வைத்திருக்க ஆண்டுதோறும் எம்எச் அலுவலகத்தில் உரிமத்தை புதுப்பித்து வருகின்றனா். இந்நிலையில் தோ்தலை முன்னிட்டு திருப்பத்தூா் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்துள்ள நபா்கள் உடனடியாக அவற்றை தங்களது பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அதிகாரியும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி உத்தரவிட்டாா்.

அதன்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் மொத்தம் 185 துப்பாக்கிகள் உரிமம் பெற்று வைத்து உள்ளனா். அதில் இதுவரை 160 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பயன்படுத்திவரும் 20 துப்பாக்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 5 துப்பாக்கிகள் ஓரிரு நாள்களில் சம்மந்தப்பட்ட நபா்கள் ஒப்படைப்பா்கள் என போலீஸாா் தெரிவித்தனா்.