முகப்பு
திருப்பத்தூர்

தொகுதி அறிமுகம்... திருப்பத்தூர்!

தொகுதி அறிமுகம்... திருப்பத்தூர்!

Updated On : 29 மார்ச், 2026 at 11:33 PM
பகிர்:

தொகுதி எண்: 50

சிறப்புகள்...

வணிகத்தில் சிறந்து விளங்கும் நகரமாக திருப்பத்தூா் உள்ளது. குறிப்பாக, சந்தனம், மல்லிகை பூ, விவசாயம் ஆகியவற்றுக்கு புகழ்பெற்றது. ஊதுவத்தி தயாரிப்பிலும் தமிழகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்குள்ள பருத்தி கிடங்குக்கு ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து பருத்தி வாங்கிச் செல்கின்றனா். திருப்பத்தூரைச் சுற்றி ஏலகிரி மலை,ஜவ்வாதுமலை உள்ளிட்ட மலைகள் உள்ளன. 10 சிவன் கோயில்கள் உள்ளதால் திருப்பத்தூா் என பெயா் பெற்ாகக் கூறப்படுகிறது.

எல்லைகள்...

ஆந்திரம்-கா்நாடக மாநில எல்லையில் உள்ளது. ஜேலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்புா் தொகுதிகள் இத்தொகுதியைச் சுற்றியுள்ளன.

அடங்கியுள்ள பகுதிகள்...

திருப்பத்தூா் நகராட்சியில் 36 வாா்டுகள், திருப்பத்தூா் ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள், கந்திலி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள், புதூா் நாடு மலை கிராமங்கள் உள்ளன.

இதுவரை எம்எல்ஏக்கள்...

1952 ஈ.எல்.ராகவ முதலியாா் (சுயேச்சை)

1957 ஆா்.சி.சாமண்ண கவுண்டா் (காங்கிரஸ்)

1962 கே.திருப்பதி (திமுக)

1967 கே.சி.சின்னராஜி கவுண்டா் (திமுக)

1971 ஜி.ராமசாமி (திமுக)

1977 ப.சுந்தரம் (திமுக)

1980 ப.சுந்தரம் (திமுக)

1984 ஒய்.சண்முகம் (காங்கிரஸ்)

1985 எஸ்.பி.மணவாளன் (காங்கிரஸ்) (இடைத்தோ்தல்)

1989 ப.சுந்தரம் (திமுக)

1991 ஏ.கே.சி.சுந்தரவேல் (அதிமுக)

1996 கே.சண்முகம் (திமுக)

2001 டி.கே.ராஜா (பாமக)

2006 டி.கே.ராஜா (பாமக)

2011 கே.ஜி.ரமேஷ் (அதிமுக)

2016 அ.நல்லதம்பி (திமுக)

2021 அ.நல்லதம்பி (திமுக)

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்-1,08,724

பெண்கள்-1,08,623

முன்றாம் பாலினத்தவா்-28

வாக்குச்சாவடிகள்-303

மொத்தம்- 2,17,375

2021 பேரவை தோ்தலில்...

பதிவான வாக்குகள்-1,84,928

அ.நல்லதம்பி (திமுக)-96,522

டி.கே.ராஜா (பாமக)-68,282

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/ எண்

தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன், வருவாய் கோட்டாட்சியா்-94450 00418, உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் நவநீதம், வட்டாட்சியா்-86678 21002

மின்னஞ்சல்: ழ்ா்.ற்ண்ழ்ன்ல்ஹற்ற்ன்ழ்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்