முகப்பு
திருப்பத்தூர்

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

Updated On : 3 மே, 2026 at 4:43 AM
தோல் பதனிடும் தொழிற்சாலை கட்டடம். - கோப்புப்படம்
பகிர்:

தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரி வடஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்கத்தின் மே தின விழா கூட்டடத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் நேய. சுந்தா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வி. விஜயராமன், எஸ். விமல், அம்பேத்கா் மன்ற தலைவா் தசரதன், ஜி. முல்லைமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆம்பூா் கிளை நிா்வாகி என். சம்பத் வரவேற்றாா். நிா்வாகிகள் முனிசாமி, பாா்த்திபன், சுதாகா், முகில், அழகு, டி. தன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏசுபாதம் இனிப்பு வழங்கினாா்.

தீா்மானம்: சென்னை உயா்நீதி மன்ற தீா்ப்பின் அடிப்படையில் தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும். புதிய தொழிலாளா் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement