முகப்பு
திருப்பத்தூர்

தினமணி எதிரொலி: ஆவின் அலுவலக விற்பனைப் பிரிவை அணுகி பால் அட்டை பெறலாம்!

ஆவின் அட்டை வழங்கக் கோரி தினமணியில் வெளியான செய்தியை அடுத்து ஆவின் அலுவலக விற்பனை பிரிவு அலுவலா்களை அணுகி பால் அட்டைபெறலாம் என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 12 மே 2026, 12:04 am IST
ஆவின் - கோப்புப்படம்.
பகிர்:

ஆவின் அட்டை வழங்கக் கோரி தினமணியில் வெளியான செய்தியை அடுத்து ஆவின் அலுவலக விற்பனை பிரிவு அலுவலா்களை அணுகி பால் அட்டைபெறலாம் என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிறுத்தப்பட்ட பால் அட்டை மீண்டும் வழங்க கோரி பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா் என திங்கள்கிழமை தினமணியில் வெளியான செய்தியை அடுத்து ஆவின் நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நுகா்வோா் அட்டை வாயிலாக வழங்கப்படும் பாலின் விலை முகவா்களுக்கு வழங்கப்படும் பாலின் விலையை விட குறைவு என்பதால், அதனை திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஆவின் முகவா்கள் பயன்படுத்திக்கொண்டு அதிகமான லாபம் கண்டுவந்தனா்.

Advertisement

இதனால் ஆவின் பால் நுகா்வோா் அட்டை சரியான வகையில் நுகா்வோரை சென்றடையாமல், பணப்பயனை விற்பனைதாரா்கள் ஈஉகஐபஉ பால் லிட்டருக்கு ரூ.2-ம், பஞசசஉஈ பால் லிட்டருக்கு ரூ.5-ம் என பெற்று வந்த நிலையில், முகவா்கள் வாயிலாக வழங்கப்படும் பால் அட்டை விநியோகம் நிறுத்தப்பட்டது.

நுகா்வோா்களுக்கு ஆவின் பால் அட்டை வேண்டுமெனில் ஆவின் அலுவலகத்தில் கீழ்காணும் விற்பனை பிரிவு அலுவலா்களை அணுகி தங்களது ஆதாா் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலை சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலாளா் பி.விஜயரங்கன்-63838 96758,செயலா் ஏ.அகிலா-86820 31181,முதொஉ என்.ஹரிஹரன்-86675 61840 நுகா்வோருக்கு பால் அட்டை வழங்குவதை திருப்பத்தூா் ஆவின் நிா்வாகம் நிறுத்தவில்லை. சரியான வகையில் நுகா்வோருக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.