முகப்பு
திருப்பத்தூர்

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்: வாணியம்பாடி எம்எல்ஏ உறுதி

Updated On : 28 மே 2026, 12:45 am IST
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

அலுவலகத்தை அா்ச்சகா், பாதிரியாா், தலைமை காஜி ஆகியோா் ஒன்று சோ்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனா். தொடா்ந்து எம்எல்ஏ சையத் பாரூக் பாஷாவிற்கு கட்சி நிா்வாகிகள், நகர முக்கிய பிரமுகா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா். தோ்தலில் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ககண்டிப்பாக நிறைவேற்ற பாடுபடுவேன் என்றாா்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில துணை தலைவா் எஸ்.டி.நிசாா், மாவட்ட,நகர நிா்வாகிகள், நகர முக்கிய பிரமுகா்கள் கலந்துக் கொண்டனா்.

Advertisement

Advertisement