ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா
: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அக்கினி வசந்த மகோற்சவ விழாவையொட்டி கடந்த 20 நாள்களாக சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.
இதன் ஒரு கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு, முருகன் கோயிலுக்கு சொந்தமான கன்னிக்கோயில், சரவணபொய்கை ஆகிய இடங்களில் தீமதித் திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் நகரமன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் மு.ஈஸ்வரப்பன், முன்னாள் அறங்காவலர் மு.நாகன், நகரமன்ற உறுப்பினர் எம்.பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்
டனர்.