திருவள்ளூர்

பிளாஸ்டிக் இல்லா ஊராட்சி: மகளிர் கூட்டமைப்பினர் உறுதியேற்பு

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த நேமள்ளூரை பிளாஸ்டிக் இல்லாத ஊராட்சியாக மகளிர் கூட்டமைப்பினர் உறுதி ஏற்றனர்.
நேமள்ளூரில் உலக மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மகளிர் கூட்டமைப்பு தலைவி மரியா மார்க்கரேட் தலைமை வகித்தார். தமிழ்ச்செல்வி, திருமலா, பிரமிளா, ஆர்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் கலைவாணி வரவேற்றார். பொருளாளர் தேவி மகளிர் தினம் குறித்து பேசினார்.
இதில் சமூக சேவை அமைப்பின் தலைவர் மனோகரன், சமூக சேவகர் என்.டி.மூர்த்தி, தேசிய வேளாண் நிறுவன ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன், பாதிரிவேடு மேற்கு நடுநிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினார். மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கிருஷ்ணம்மா, கனரா வங்கி கிளை மேலாளர் பி.தினேஷ்குமார், சீனிவாசன், அவார்டு தொண்டு நிறுவனர் ஏ.கல்யாணி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். இதில், நேமள்ளூர் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றுவதற்கு மகளிர் குழுவினர் உறுதி ஏற்றனர். எலிசபெத் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT