திருவள்ளூர்

புதுவாழ்வு திட்டம் மூலம் காய்கறி சந்தை தொடக்கம்

DIN

தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில், காய்கறி வாரச் சந்தை அண்மையில் தொடங்கப்பட்டது.
அரசின் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி அளவிலான மகளிர் குழுக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இக்கூட்டமைப்பின் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டு, அதன் மூலம் அவர்களின் பொருளாதார மேம்பாடு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த காய்கறி உற்பத்தியாளர்களைக் கொண்டு சிறு தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே அம்மணம்பாக்கத்தில் காய்கறி வாரச் சந்தை தொடங்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவுக்கு புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் பி.தனசேகர் தலைமை வகித்து, வாரச் சந்தையைத் தொடங்கி வைத்தார். உதவித் திட்ட மேலாளர் சுபான் முன்னிலை வகித்தார். வேளாண் ஆலோசகர் ரெக்ஸ் வாஷ் வரவேற்றார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை புதுவாழ்வு திட்ட அணி தலைவர்கள் அ.நாகராஜ், வெங்கடேசன், வேளாண் தொழில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT